உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா! தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம், சவரன் ரூ.9520 உயர்வு
தங்கம்,வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று சவரனுக்கு ரூ.9,520 தங்கம் உயர்ந்துள்ளது. அதே போன்று வெள்ளியும் கிராம் ரூ.425 ஆக உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய தினம் தங்கம் விலை காலை,மாலை என இருவேளையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையனது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று காலை உயர்ந்தது. கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 400 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ1,34,400 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800, இன்று ஒரே நாளில் கிராம் ரூ.1,190 உயர்வு. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளியும் கிராமுக்கு ரூ.25 உயர்வு. ஒரு கிராம் வெள்ளி ரூ.425 விற்பனை. ஒரு கிலோ வெள்ளி ரூ,4,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
What's Your Reaction?

