சுட்டெரிக்கும் வெயில்.. இந்த நேரத்தில் வெளியே வராதீங்க.. அன்போது சொன்ன ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2024 - 12:37
சுட்டெரிக்கும் வெயில்.. இந்த நேரத்தில் வெளியே வராதீங்க.. அன்போது சொன்ன  ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. ராதாகிருஷ்ணன், முக்கியமாக தொற்றுநோய் என்றால் 70% கால்நடைகளில் இருந்து நம்மிடமும் நம்மிடம் இருந்து கால்நடைக்கும் ஏற்படுகிறது, இதனால் உலக கால்நடை தினம் கடைபிடிப்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது, 

அண்மையில் ராயப்பேட்டையில் ஒரு சிறுமியை மாடு முட்டியது நல்வாய்ப்பாக அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, கால்நடை வளர்ப்போருக்கு ஒரு வேண்டுகோள் கால்நடை வளர்ப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, தெருக்களில் ஆடு மாடுகளை விடும்போது அதற்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது, எனவே இதனைத் தவிர்த்து எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கால்நடை உரிமையாளரிடம் கேட்டுக்கொள்கிறோம், 

சென்னை அரசு மருத்துவமனைகளில் ராபீஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது அதுமட்டுமல்லாமல் நாய்களுக்கு வரக்கூடிய ஆறு நோய்களுக்கான ஊசியும் இங்கே போடப்படுகிறது, பிடிபட்ட அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது, 

முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

சென்னையில் 158 இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஓ ஆர் எஸ் கரைசல் வைத்துள்ளமோ அந்த இடத்தில் எல்லாம் மருத்துவ பணியாளர்கள் கட்டாயம் இருப்பார்கள். வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 100% 24 மணி நேரமும் முழு கட்டுப்பாட்டில் உள்ளது, நான்கடுக்கு பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது

சிசிடிவி கேமராக்கள் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் தற்போது வரை ஏற்படவில்லை, தொழில்நுட்ப அதிகாரிகள் அருகிலே இருக்கிறார்கள் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow