இவ்ளோ தாங்க வாழ்க்கை.. ஜிம்முக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 32 வயசு டாக்டர்.. உயிரை பறித்த எமன்

இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Apr 29, 2024 - 12:27
இவ்ளோ தாங்க வாழ்க்கை..  ஜிம்முக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 32 வயசு டாக்டர்.. உயிரை பறித்த எமன்

ராமநாதபுரத்தில் 32 வயதே ஆன மருத்துவர் ஒருவர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வசந்த கிருஷ்ணன், 32 வயதான அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 

இவருக்கும், மருத்துவர் சிவலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. அத்துடன், வசந்த கிருஷ்ணனின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வசந்தகிருஷ்ணன் அருகிலுள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது லேசான மயக்கம் ஏற்பட்டது. கீழே விழுந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மாரடைப்பு காரணமாக வசந்த கிருஷ்ணன் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow