டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி..இந்திய அளவில் 576-வது இடம் பிடித்து சாதனை..

Apr 28, 2024 - 14:46
டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி..இந்திய அளவில் 576-வது இடம் பிடித்து சாதனை..

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் டீக்கடைக்காரர் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த வேல்முருகன் சிறிய டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி லட்சுமி பீடி சுற்றும் தொழிலாளியாக உள்ளார். இவர்களின் மகன் பேச்சி கடந்த வாரம் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் 576-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஒன்று முதல் 12 வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியர் படிப்பு முடித்துள்ளார். 

இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் கடந்த நான்கு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். ஆனாலும் அது ஒரு புறம் இருந்தாலும்  டிஎன்பிஎஸ்சி குரூப்-4.ல் தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தற்போது வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேச்சியின் விடாமுயற்சியால் கடந்தாண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தை மட்டுமல்லாமல் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

பேச்சியின் தந்தை வேல்முருகன் மகன் கலெக்டராக வேண்டும் என்ற கனவை நினைவாக்க சொந்த வீட்டையே விற்று படிக்க வைத்துள்ளார். தற்போது தேர்வில் மகன் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் எனது கனவு நிறைவேறியது என ஆனந்த கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow