"சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்" - முதலமைச்சர் சொல்ல சொல்ல எழுந்துசென்ற பாமகவினர்....
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், முதலமைச்சர் பதில் அளித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தரப்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்தபோது, மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்றும், அதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முடிவெடுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து பலமுறை சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், திமுக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் உறுதியாகக் கூறினார்.
ஆனாலும், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?