இந்த நாளில் அக்தர் செய்த சம்பவம்... உலகின் அதிவேக பந்துவீச்சாளராக மாறிய மேட்ச்..!
2003ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிவேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க பேட்டர் நிக் நைட்டுக்கு எதிராக மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இதன் மூலம், உலகின் அதிவேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் அக்தர். அதே ஓவரில் அடுத்த ஐந்து பந்துகளையும் புயல் வேகத்தில் அவர் வீசினார். அந்த ஓவரில் அக்தரின் சராசரி வேகம்: 158.06 என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்படும் அக்தர், 46 டெஸ்டுகளில் 178 விக்கெட்டுகளும், 163 ஒருநாள் ஆட்டத்தில் 247 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அக்தருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் உள்ளார். 2010ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் மணிக்கு 161.1 கிமீ வேகத்தில் அவர் பந்து வீசினார். மூன்றாவது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உள்ளார்.
மேலும் படிக்க :
What's Your Reaction?