முருகனை தரிசிக்க பழனி சென்ற ஓபிஎஸ்... தங்கத்தேர் இழுத்தது யாருக்காக..?

பழனி சென்று முருகனை தரிசனம் செய்த ஓ பன்னீர்செல்வம் அங்கே தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தது யாருக்காக என்று தெரியுமா...

Mar 19, 2024 - 12:09
முருகனை தரிசிக்க பழனி சென்ற ஓபிஎஸ்... தங்கத்தேர் இழுத்தது யாருக்காக..?

ஓ.பன்னீர்செல்வம் பழனி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும், தனது பெயரிலும் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தனிக்கட்சி தொடங்கவும் அவர் மனு அளித்துள்ளார். கட்சியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அவர் செயல்பட உள்ளார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னதாக பழனி முருகனை தரிசனம் செய்யும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பழனி சென்றார். அங்கு சென்று தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவரை, கட்சியின் நகர நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து ரோப்கார் மூலம் மலை மேல் ஏறி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தார். பின்னர், பிரதமர் மோடி பெயரிலும், தனது பெயரிலும் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

பழனி மலையிலிருந்து இறங்கிய அவரிடம், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் ஓபிஎஸ் சென்றுவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow