4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் - ம.பி. வீரர் சாதனை
மத்தியப்பிரதேச வீரர் குல்வந்த் கெஜ்ரோலியா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை போட்டியில் பரோடா அணிக்கு எதிராக மத்தியப்பிரதேசம் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மத்தியப்பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி 111 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பரோடா அணி தனது முதல் இன்னிங்ஸில் 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, ஃபாலோ-ஆன் பெற்ற பரோடா அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 270 ரன்கள் மட்டுமே எடுக்க மத்தியப்பிரதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய குல்வந்த் கெஜ்ரோலியா கடைசி 4 விக்கெட்டுகளை 4 பந்துகளில் வீழ்த்தி அசத்தினர். ரஞ்சிப் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 3வது முறையாகும்.
What's Your Reaction?