இந்திய ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! இந்த ஆண்டும் ஐபிஎல் இந்தியாவில் தான்….ஐபிஎல் தலைவர் உறுதி!

Feb 21, 2024 - 15:04
இந்திய ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! இந்த ஆண்டும் ஐபிஎல் இந்தியாவில் தான்….ஐபிஎல் தலைவர் உறுதி!

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் எங்கு நடைபெறும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீடித்தது. 2009, 2014 சீசன்களைப் போல வெளிநாடு ஒன்றில் நடத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்யங்கள் உலாவின.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் அருண் துமால், இந்த சீசன் ஐபிஎல் இந்தியாவில் தான் நடைபெறும் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாடு ஒன்றில் ஐபிஎல் நடத்தப்படும் என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், ஐபிஎல் சீசனின் முதல் 10 நாட்களுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு அடுத்தக்கட்ட ஐபிஎல் ஆட்டங்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்று அருண் துமால் கூறினார். மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ல் தொடங்குவதால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது, இரண்டாம் பாதி ஐபிஎல் ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

2009-ல் முதல் 20 ஆட்டங்களும் ஐக்கிர அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. அதே சமயம், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, அனைத்து ஐபிஎல் ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow