பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.

Mar 7, 2024 - 21:47
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தான் மக்களவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், அதன் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வெற்றி பெற்றன. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், அந்நாட்டின் இடைக்கால பிரதமராகவும் இருந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 4ம் தேதி இரண்டாம் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5ம் தேதி எக்ஸ் வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் வலைத்தளம் மூலமாகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow