பவன்கல்யாண் கட்சி எம்எல்ஏ ஆபாச வீடியோ லீக்: சமூக வலைதளங்களில் வைரல்
ஆந்திராவில் பவன்கல்யாண் கட்சி எம்எல்ஏ பாலியல் ரீதியாக பெண் ஒருவரை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் ஜனசேனா கட்சியை சேர்ந்த ரயில்வே கொடுரு தொகுதி எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் எம் எல் ஏ வாக பதவியேற்ற சில நாட்களில், ஒருமுறை தன்னை காரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் அரவ ஸ்ரீதர் ஈடுபட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுடன் ஸ்ரீதர் தன்னுடன் வீடியோ காலில் பேசிய பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆடை இல்லாமல் ஜனசேனா எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் ஆபாசமான செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஒரு வருடத்தில் 5 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், எம் எல் ஏ தன்னை மிரட்டி பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.அதுமட்டுமின்றி கணவரை தொடர்பு கொண்டு விவாகரத்து கொடுக்குமாறு அரவ ஸ்ரீதர் மிரட்டுவதாகவும் அந்த பெண்மணி குற்றச்சாட்டியுள்ளார். உனது கணவரை விவாகரத்து செய் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என எம் எல் ஏ கூறியதாகவும் அந்த வீடியோவில் பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு தன்னை பற்றியா டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?

