4ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு... 24% ஐ கடந்த வாக்குப்பதிவு

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 11 மணி நிலவரத் தகவல் வெளியாகியுள்ளது.

May 13, 2024 - 10:44
May 13, 2024 - 12:24
4ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு... 24% ஐ கடந்த வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் தெலங்கானா (17 தொகுதிகள்), ஆந்திரா (25 தொகுதிகள்), உத்தரப்பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியப்பிரதேசம் (8 தொகுதிகள்), மகாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), மேற்குவங்கம் (8 தொகுதிகள்) என மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

தொடர்ந்து நாடு முழுவதும் 17.70 கோடி வாக்காளர்களுக்காக 1.92 லட்சம் வாக்குச்சாவடிகளில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களுடன் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், TMC மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா, AIMIM கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன், முன்னாள் கிரிக்கெட் வீரரும் TMC வேட்பாளருமான யூசுஃப் பதான், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் Y.S.சர்மிளா ஆகிய முக்கியத்தலைவர்கள் இன்று களம் காண்கின்றனர்.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி  நாடு முழுவதும் 24.87% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 32.78%, குறைந்தபட்சமாக ஜம்முகாஷ்மீரில் 14.94% வாக்குகள் பதிவாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow