36 தொகுதி, 1 ராஜ்யசபா வேணும்: கனிமொழியிடம் ராகுல் கொடுத்த தொகுதி லிஸ்ட், அறிவாலயம் அதிர்ச்சி
36 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என தொகுதி பட்டியலை ராகுல்காந்தி கனிமொழியிடம் கொடுத்திருப்பது அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. ஆனால் திமுக கூட்டணி இணக்கமாக இருந்தாலும், இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற குரல்களை எழுப்பினர். இது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவின் பதிலுக்கு 2 மாதங்களாக காத்திருக்கிறோம்.
கூட்டணி பேச்சு இதுவரை தொடங்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பில் இருந்து ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இடையிலான சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சுமார் ஒரு மணி வரை நீடித்த இந்த சந்திப்புக்கு நடைபெற்றது. 36 தொகுதி, 1 ராஜ்யசபா சீட் தரவேண்டும் ராகுல்காந்தி கனிமொழியிடம் தொகுதி பட்டியலை கொடுத்து இருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் காங்கிரசுக்கு திமுக அளித்தது. இந்த முறை ஆட்சியில் பங்கு, அதிக சீட் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து திமுகவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 36 தொகுதி பட்டியலை ராகுல் அளித்து இருப்பது அறிவாலயத்திற்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

