பெட்ரோல் ரூ 25, டீசல் ரூ.20 விலை உயருகிறது? எண்ணெய் நிறுவனங்கள் சூசக தகவல்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25-ம், டீசல் லிட்டாருக்கு ரூ.20-ம் விலை உயர வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளன.

பெட்ரோல் ரூ 25, டீசல் ரூ.20 விலை உயருகிறது? எண்ணெய் நிறுவனங்கள் சூசக தகவல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு சுமார் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, தற்போதைய போர் பதற்றம் காரணமாக ஏப்ரல் இறுதியில் சராசரியாக 114 டாலரைத் தாண்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.20 வரையிலும், டீசலில் லிட்டருக்கு ரூ.100 வரையிலும் நஷ்டம் ஏற்படுவதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு குறித்த அரசின் விளக்கம்

சர்வதேச அளவில் எரிசக்தி செலவுகள் அதிகரித்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போதைக்கு மாற்றமில்லை என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25-ம், டீசல் லிட்டருக்கு ரூ.20-ம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மே4-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

வணிக சிலிண்டர் விலை உயர்வு 

5 மாநில தேர்தல் முடிந்த பிறகு வணிக சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உணவு பொருட்களின் விலையை அதிகரிக்கும் என விலை உயர்வை திரும் பெற காங் மூத்த தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதே போன்று பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு உயர்த்தும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. 

2022ம் ஆண்டு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்த போதிலும், விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஈரான், அமெரிக்கா போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்தி வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow