அரியலூரில் அதிர்ச்சி.. 7ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த உடற்கல்வி ஆசிரியர்.. போக்சோவில் கைது
வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்து வாழ்க்கையை சீரழித்த உடற்கல்வி ஆசிரியர் உள்பட இரண்டு பேரை கைது செய்தனர்.
 
                                பாதிக்கப்பட்ட சிறுமி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். 12 வயதான அந்த சிறுமியை அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி, 22 என்பவர் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
அபிமானி தன்னிடம் தனியாக நடந்து கொண்டது குறித்து அந்த சிறுமி தான் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்து வரும் உடற் கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ், 52 என்பவரிடம் புகார் செய்தார். அதனை விசாரிக்க வேண்டிய ஹெரால்டு சகாயராஜ் , பாதிக்கப்பட்ட சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரணை நடத்தினர். சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனார் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்க தாமதப்படுத்தவே, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். நடந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            