+2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களே கவனம்.. தவறு செய்தால் நடவடிக்கை பாயுமாம்!

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Apr 1, 2024 - 14:22
+2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களே கவனம்.. தவறு செய்தால் நடவடிக்கை பாயுமாம்!

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் 3,302  மையங்களில் நடைபெற்றது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 360  மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.  

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று, 86 மையங்களில்  தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின் மே 6ஆம் தேதி தேர்வு முடிவுககள் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் கவன குறைவாக நடந்தாலோ, விதிமீறல்களில் ஈடுபட்டாலோ,  துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனுடன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தைக் கொண்டும் மொபைல்போனை பயன்படுத்த கூடாது. இது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும், திருத்துதல் பணிகள் செய்யும்போது குழுவில் பேசிக்கொண்டோ, அடிக்கடி வெளியில் சென்று வருவது, காலதாமதமாக வருவது ஆகிய செயல்களை தவிர்க்கப்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இப்பணியில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுப்படுவது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow