பெட்ரோல் போட்டும் ஓடாத வாகனங்கள்.. சற்று நேரத்தில் சலசலப்பு..

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் ஒரே நேரத்தில் இயங்காமல் நின்று போனது. இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Oct 27, 2024 - 09:43
பெட்ரோல் போட்டும் ஓடாத வாகனங்கள்.. சற்று நேரத்தில் சலசலப்பு..

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பிறகு ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கிலேயே இயங்காமல் நின்று போனது இதனால் ஆவேசம் அடைந்த வாகன ஓட்டிகள் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திரவலி தச்சநல்லூர் அருகே மதுரை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பைக் மற்றும் கார் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இரவு சுமார் ஒன்பது மணி அளவில் 15 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு அவற்றை மீண்டும் இயக்கிய போது அனைத்து வாகனங்களின் இயக்கமும் ஒரே நேரத்தில் இயங்காமல் நின்று போனது. இதனால் பெட்ரோலில் கலப்படம் இருக்கலாமா என சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

 மேலும் அதனால் தான் ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதாக கருதியை வாகன ஓட்டிகள் இது தொடர்பாக பெட்ரோல் பங்கின் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் சென்ற அனைத்து வாகனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் தச்சநல்லூர் போலீசார் வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இதில் தவறுகள் எதுவும் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்காலிகமாக வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர். மேலும் டூவீலர் மெக்கானிக்கை வரவழைத்து வாகனங்களை சீராக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றனர். அதன் பிறகு அனைத்து வாகன ஓட்டிகளும் அங்கிருந்து கலந்து சென்றனர். 

இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக மழை நீர் பங்கின் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கலந்ததால் பெட்ரோலின் தரம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் நிரம்பிய அனைத்து வாகனங்களும் உடனடியாக ஸ்டார்ட் ஆகுவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow