Rajini: “ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மோடி...” வாழ்த்து சொன்ன ரஜினி... கடைசியா அந்த ரியாக்ஷன்!

இமயமலை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தேர்தலில் வெற்றிப் பெற்ற தலைவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

Jun 5, 2024 - 18:04
Jun 6, 2024 - 09:48
Rajini: “ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மோடி...” வாழ்த்து சொன்ன ரஜினி... கடைசியா அந்த ரியாக்ஷன்!
சென்னை: ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள், நேற்று (ஜூன் 4) வெளியாகின. பாஜக மூன்றாவது முறையாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும் என அனைத்துவிதமான கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் எனவும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனைத் தொடர்ந்து வரும் 8ம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னை இருந்து திரும்பிய ரஜினி
இதனிடையே, கடந்த வாரம் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரிஷிகேஷ், பத்ரிநாத், இமயமலை என பல இடங்களுக்கு விசிட் அடித்த ரஜினி, இன்று டெல்லி வழியாக சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் வெற்றிப் பெற்ற தலைவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதாவது, “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
 
தலைவர்களுக்கு ரஜினி வாழ்த்து
அதேபோல், “மத்தியில் NDA கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என கூறினார். மேலும், டெல்லியில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்வது குறித்து முடிவெடுக்கவில்லை எனவும் ரஜினி தெரிவித்தார். அதேபோல், ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாகவும், ஆன்மீகப் பயணம் அருமையாக இருந்ததோடு, ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மோடி என மூவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
டெல்லியில் வலம் வந்த ரஜினி
முன்னதாக இன்று காலை ரஜினி டெல்லியில் வலம் வந்த வீடியோக்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகின. இதனால் அவர் டெல்லியில் மோடி, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்திக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அது உண்மையில்லை என்றும் சென்னை வரும் வழியில் அவர் டெல்லி சென்றிருந்ததும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், 8ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்விற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow