பாட்டி செய்யும் பிரியாணிதான் ஃபேவரைட்.. பீட்ஸாவும் புடிக்கும்.. விடுதலை பவானி ஸ்ரீ எக்ஸ்க்ளூசிவ்

எங்க வீட்ல பாட்டி செய்ற பிரியாணி ரொம்ப நல்லாருக்கும், என்னோட பேவரைட். என்னோட ரெண்டு பாட்டியும் பிரியாணி சூப்பரா செய்வாங்க என்று கூறியுள்ளார் விடுதலை நாயகி பவானி ஸ்ரீ.

Aug 28, 2024 - 14:22
Aug 28, 2024 - 15:19
பாட்டி  செய்யும் பிரியாணிதான் ஃபேவரைட்.. பீட்ஸாவும் புடிக்கும்.. விடுதலை பவானி ஸ்ரீ எக்ஸ்க்ளூசிவ்
viduthalai movie heroine bhavani sre

சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பிலும் தூள் கிளப்பி வரும் நிலையில் அவரைத் தொடர்ந்து அவரின் தங்கை பவானி ஸ்ரீயும் இப்பொழுது திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். பிரபலமான இசைக்குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்த பவானி ஸ்ரீ அசத்தலான நடிப்பினால் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். குமுதம் சிநேகிதிக்காக நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்ட பெர்சனல் பக்கங்களைப் பார்க்கலாம்.

உங்களுக்கு  நேச்சரல் மேக்கப், ஹை மேக்கப் எது பிடிக்கும்.?

எனக்கு நேச்சரல் மேக்கப் தான் புடிக்கும். கொஞ்சம் ஹை மேக்கப் பண்ணாலும், என்னோட பேஸ்ல சேஞ்சஸ் தெரியும், அதனால நேச்சரல் மேக்கப் தான் யூஸ் பண்ணுவேன்.

பவானிஸ்ரீ-க்கு டிரெடிஷனல் புடிக்குமா.? இல்ல வெஸ்டர்ன் புடிக்குமா.?

சாரியும் புடிக்கும். வெஸ்டர்னும் புடிக்கும். எனக்கு ரெண்டுமே புடிக்கும்.

விடுதலை படத்தில் மலைவாழ் பொண்ணா நடிச்சிருப்பிங்க, அதோட மேக்கப் உங்களுக்கு எப்படி செட் பண்ணிங்க.?

நான் ஏற்கனவே க.பெ.ரணசிங்கம் படம் பண்ணதால, என்னோட மேக்கப் DULL பண்ணுறதுல பிரச்சனை இல்ல. விடுதலை நடிக்கும் போது, அந்த லொகேஷன் போய் அங்க வெயில்ல நிக்க சொல்லுவாங்க. பர்ஸ்ட் செட்யூல் நேச்சரலாவே லுக்ல நடிச்சேன். செகண்ட் செட்யூல்ல தான் மேக்கப் போட்டேன்.

விடுதலை சூட்டிங் காட்டுல நடந்துச்சு., அங்க பூச்சி தொல்லைங்க நிறைய இருந்துருக்கும் அங்க எப்படி உங்க SKIN MAINTAIN பண்ணிங்க?
இந்த படம் பண்ணும்போது நான் ரொம்ப க்ளியரா இருந்தேன். என் SKINஅ பத்தி CARE பண்ணிக்க கூடாதுனு. முகத்துல MARKS, புள்ளி புள்ளியா வந்தாலும் கூட அப்படியே விட்டுடலாம்னு தான் இருந்தேன். முகத்துக்குனு எந்த க்ரீமும் போடல, நேச்சரல் லுக்ல இருந்தேன்.

பவானிஸ்ரீ-யோட ரெகுலரான மேக்கப் & ஸ்கின் கேர் என்ன.?

காலைல எழுந்ததும் வைட்டமின்–C-ங்ற SERUM தான் USE பண்ணுவேன். அப்புறம் MOISTURIZER போடுவேன். அப்புறம் SUN SCREEN USE பண்ணுவேன். நைட்ல SERUM, MOISTURIZER, அப்புறம் NIGHT SCREEN USE பண்ணுவேன். இப்போ தான் கொஞ்ச நாளா TWICE A DAYனு USE பண்ணுறேன். முன்னாடி LOCKDOWN TIMEல இதெல்லாம் போட்டுட்டு எங்க போகப் போறோம்னு சொல்லி, MORNING மட்டும் தான் USE பண்ணுவேன்.  

OUTSIDE MAKEUP மட்டுமில்ல IN TAKE எடுக்குறதும் HEALTHக்கு நல்லது, உங்களோட IN TAKE என்ன. ?

ABC ஜூஸ் நெல்லிக்காய், இஞ்சி கலந்து குடிப்பேன். இது எனக்கு ஐஸ்வர்யா ராஜேஸ் தான் டிப்ஸ் சொன்னாங்க. அவங்க சொன்னதுலருந்து நான் USE பண்ண ஆரம்பிச்சுட்டேன். MORNING ஒரு டம்ளர் குடிப்பேன். வொர்க் அவுட் பண்ணுறதால வாழைப்பழம், பெர்ரி, ஸ்ட்ராபெரி, ப்ளுபெரி, பேரீச்சை, ஸ்வீட் மில்க் கொஞ்சம் சேர்த்துட்டு புரோட்டின் SHAKE குடிக்குறேன். அது தான் எனக்கு நைட் டின்னரும். பொதுவா நான் டிபன் எதுவும் விரும்பி சாப்புடமாட்டேன். நம்ம ஹெல்த் பாத்துக்க வேண்டியதால தான் இப்படி கண்ட்ரோலா இருக்கேன்.

இப்போ பவானிக்கு பயங்கர CRAVING வந்துடுச்சு, ஆர்டர் பண்ணுற FIRST FOOD என்னவா இருக்கும்.?
 
பிரியாணி தான் என்னோட பேவரைட். ஆனா., அது எப்படியும் வீட்ல செஞ்சுடுவாங்க. அது இல்லாம சிக்கன் பர்கர், பீட்ஸா, ஆர்டர் பண்ணுவேன்.  MOOD OUT ஆகி சாப்புட்டே ஆகணும்னு நினைக்கும் போது பீட்ஸா ஆர்டர் பண்ணுவேன். முன்னாடி MARRY BROWN ஒண்ணு இருந்தது, இப்போ அந்த கடை இல்லனு நினைக்குறேன். ரைட்டர்ஸ் கபே-னு ஒண்ணு இருக்கு அங்க அவங்களோட சிக்கன் பர்கர் பிடிக்கும்.

பிரியாணினா சென்னைல பவானி எங்க சாப்புடுவாங்க. உங்களுக்கு பிடிச்ச பேவரைட் ஷாப் எது.?

எங்க வீட்ல எங்க பாட்டி செய்யுற பிரியாணி ரொம்ப நல்லாருக்கும், என்னோட பேவரைட். என்னோட ரெண்டு பாட்டியும் பிரியாணி சூப்பரா செய்வாங்க. எங்க வீட்ல சமையல் செய்யுறவங்களும் நல்லா பிரியாணி சமைப்பாங்க. அதனால பிரியாணிய பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப லக்கி.

நீங்க சமைப்பிங்களா.? நீங்க விரும்பி சமைக்குற டிஷ் எது.?

இல்ல., எனக்கு சமைக்க தெரியாது. சமையல் கத்துக்கணும். கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு மைண்ட்ல வைச்சுருக்கேன்.

உங்களோட டிரெஸ்ஸிங் PATTERN எதாவது இருக்கா.? இல்ல உங்களோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இப்படி தானா.?

எனக்கு எது பிடிக்கும்னு பாத்து பாத்து செலக்ட் பண்ணுவேன். நான் நல்ல ஸ்டைலிஷ்ட் கூடலாம் வொர்க் பண்ணிருக்கேன். இப்போ சமீபமா என்னோட நிகழ்ச்சிலாம், நவதீதி-னு ஒரு ஸ்டைலிஷ் கூட வொர்க் பண்ணேன். அப்புறம் ஸ்ருதி மஞ்சுரி-னு நிறைய பேர் கூட வொர்க் பண்ணிருக்கேன். எல்லா ஸ்டைலிஷும் எனக்கு புடிச்சவங்க தான். எனக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ணுவாங்க.

விடுதலை படத்துல பாவாடை தாவணில நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது.?

எந்த ஒரு கேரக்டர் பண்ணாலும், அந்த கேரக்டருக்கான டிரெஸ்ஸிங் என்னவோ அத நாம PARTஆ ஏத்துக்கணும். அந்த கேரக்டர் பண்ணும் போது, AUTOMATICஆ அதோட BODY LAUNGAGE, DRESSING எல்லாமே UNDERSTAND பண்ணிக்கணும். நான் அந்த கேரக்டர் பண்ணத ரொம்பவே பெருமையா நினைக்குறேன். எனக்கு புடிச்ச கேரக்டராவே இருந்தது.

காடு, மலைல சூட் பண்ணாலே அட்டை பூச்சி கடிக்கும்னு சொல்லுவாங்க அங்க அதெல்லாம் FACE பண்ணிங்களா.?

கண்டிப்பா. ஸ்பாட்ல அட்டை பூச்சி கடிக்காத ஆளே கிடையாது. சும்மா அப்படி நடந்து போனாலே அசால்ட்டா 4, 5, அட்டைய காலுலருந்து எடுத்து தூக்கி போட்டுட்டு அவங்க பாட்டுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. நான்லாம் சும்மாவே பூச்சி எதுனா பறந்தாலே பயப்படுற ஆளு., ஆனா விடுதலை சூட்டிங் ஸ்பாட் போயிட்டு வந்த பிறகு, அட்டை பூச்சி, எதுனாலும் இப்போ பயப்படுறதே இல்ல.
 
உங்களுக்கு பிடிச்ச நடிகைகள் யாரு.? அவங்க நடிப்புல உங்களுக்கு பிடிச்சது.?

சிம்ரன் மேம், பார்வதி மேனன், ராதிகா ஆப்தே, கங்கணா ரணாவத் இவங்களாம் பிடிக்கும். எனக்கு அவங்க எல்லாரும் பண்ணுற கேரக்டர் நடிக்கும் போது, அத எப்படி PERFORM பண்ணுறாங்க, அதுக்கு எப்படிலாம் JUSTIFY பண்ணுறாங்கனு பாப்பேன். சிம்ரன் மேம், ரொமான்ஸ், காமெடி, சீரியஸ்னு எல்லா ஜானர்லயும் சூப்பரா நடிச்சிருப்பாங்க. மத்த எல்லாரும் கூட அவங்களோட பெஸ்ட எல்லா ஜானர்லயும் குடுப்பாங்க. அவங்க படங்கள்லாம் பாத்து, அவங்ககிட்டயிருந்து கத்துக்குறதுக்கே நிறைய இருக்கும். 

சிம்ரன் மேடத்த மீட் பண்ணிருக்கீங்களா.?

இல்ல., ஆனா., எனக்கும், சிம்ரன் மேமுக்கும் ஒரே BIRTH DATE தான். இன்னும் அவங்கள மீட் பண்ணல.

உங்களோட SELF MAKEUPனா, என்ன USE பண்ணுவிங்க.?

நான் MOISTURIZER போட்டுட்டு BOUNTATION USE பண்ணுவேன். EYE SHARROW, MUSCARA, EYE BROWS TRIM பண்ணுவேன். சிம்பிளா போறதுனா, லிப்ஸ்டிக், BOUNTATION போதுமானது. ஒரு EVENTக்கு போகணும்னா, PLUSH CONTORE, மாதிரி போட்டுட்டு போவேன்.

இப்போ சமீபமா BODY SHAMING பத்தி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பண்ணுறவங்களுக்கு என்ன மாதிரியா REPLY கொடுப்பிங்க,?

ஒருத்தவங்களால அது மாதிரி யோசிக்கவோ, பேசவோ முடியும்னா, அது அவங்க INSECUREஆ இருந்தா மட்டும் தான் முடியும். நாம ஒரு ஹெல்த்திங் மைண்ட் செட்ல இருந்தோம்னா, மத்தவங்க மேல இப்படிலாம் கமெண்ட் பண்ண தோணாது. அத IGNORE பண்ணிட்டு போறதுதான் நல்லது.

மீடியாவுல வொர்க் பண்ணுற பெண்களுக்கு அப்படியான கமெண்ட்ஸ் வரும் போது, அதையெல்லாம் தாண்டி வொர்க் பண்ணனும், அப்படிப்பட்டவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறிங்க.?

அவங்க ஏன் அப்படி பேசுறாங்கனு ஒரு நிமிஷம் யோசிக்கணும், அது அவங்களோட INTENSEN பொறுத்து, அதாவது அவங்களோட எண்ணத்த பொறுத்தது., நீங்க அத பர்சனலா எடுத்துக்காம, கண்டுக்காம போக வேண்டியது தான்.

பவானிஸ்ரீ லைப்ல சிநேகிதிங்ற இடம் யாருக்கு இருக்கு.?

எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க., அதுல ஒருத்தர்னு சொல்ல முடியாது. ஸ்கூல்,காலேஜ்னு எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் சப்போர்ட்டா இருந்துருக்காங்க., நிறைய WELL WISHERS இருக்காங்க, அவங்களால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒருத்தர சொல்றதால, இன்னொருத்தர மறந்த மாதிரி ஆகிடும். அதனால எல்லாருமே.

பெண்களுக்கு பவானிஸ்ரீ சொல்லக்கூடிய CONFIDENT ஆன CODEனா என்ன, அதாவது டிப்ஸ் என்ன.?

என்ன சொல்றதுனு தெரில. HAPPY ஆ இருக்கணும். ஒரு விஷயம் பண்ணனும்னு தோணும் போது பண்ணிடணும், கல்யாணம், குடும்பம்னு நிறைய விஷயம் இருக்கும், அதெல்லாம் கடந்து நமக்கு இருக்குற ஒரு லைப்ல, நாம பண்ணனும்னு நினைக்குறத பண்ணிடனும், எதாவது FASHION, வொர்க் மேல ஈடுபாடோ, இல்ல எதையாவது செய்யணும்னு நினைச்சுங்கனா கஷ்டப்பட்டாவது செஞ்சுடுங்க. அதான் சொல்ல முடியும்.

- விஜி பழனிச்சாமி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow