என்னது, ரஜினி சம்பளம் ரூ.260 கோடியா? மார்க்கெட் கூடிட்டாலே அப்படித்தான்...

Apr 24, 2024 - 09:49
என்னது, ரஜினி சம்பளம் ரூ.260 கோடியா? மார்க்கெட் கூடிட்டாலே அப்படித்தான்...

கூலி திரைப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.260 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினி நடிக்கும் படம் கூலி. சில தினங்களுக்கு முன்பு இந்த பட தலைப்பு அறிவிக்கப்பட்டது. இன்னமும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் வெளியிடப்படவில்லை. நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக கேள்வி. வழக்கம்போல் லோகேஷ் படம் என்பதால் அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.260 கோடி முதல் ரூ.280 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்தில் அவருக்கு ரூ.236 கோடி சம்பளம். நடிகர் அஜித் அடுத்த படத்துக்கு ரூ.200 கோடி வரை கேட்பதாக கேள்வி.

இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றி காரணமாக, ரஜினிகாந்த் மார்க்கெட் உயர்ந்த நிலையில் இவ்வளவு சம்பளம் என தகவல். ரஜினி படங்களின் சேட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ ரைட்ஸ் ரூ.300 கோடிக்கு மேல் பிசினஸ் ஆவதால் இவ்வளவு சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் யோசிப்பதில்லை. இது தவிர ஓராண்டுக்குள் ரஜினி தனது படத்தை முடித்து கொடுத்துவிடுவதால் தயாரிப்பாளர்கள் அவரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இந்த சம்பளம் மூலம், தான் உச்ச நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. இப்போது நடித்து வரும் வேட்டையன் படமும் வெற்றி பெற்றால் ரஜினின்172 பட சம்பளம் ரூ.300 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை குறைவாக அல்லது ஒரு பகுதி வாங்கிக்கொண்டு படத்தின்  வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக பெறுகிறார்கள். இதனால் யாருக்கும் ரூ.300 கோடி, ரூ.200 கோடி சம்பளம் இல்லை. அந்த வகையில் இந்திய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் ரஜினி திகழ்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow