நிலத்தகராறால் ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்.. தந்தை, மகன்களை கைது செய்த போலீஸ்..

அரக்கோணம் அருகே நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் அவரது இரு மகன்களை போலீசார் கைது செய்தனர். 

Apr 24, 2024 - 10:11
நிலத்தகராறால் ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்.. தந்தை, மகன்களை கைது செய்த போலீஸ்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கிழவனம் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். ஆட்டோ ஓட்டுநரான பரந்தாமனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் கொல்லாபுரி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் இரு குடும்பத்தாருக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பரந்தாமன் தன்னுடைய நிலத்திற்கு சென்றபோது கொல்லாபுரி மற்றும் அவருடைய மகன்கள் கவாஸ்கர், பிரபாகர் ஆகியோர் பரந்தாமனை  கத்தி கொண்டு சராமரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த பரந்தாமனை மீட்ட அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரந்தாமன் அனுப்பி வைத்தனர். பரந்தாமன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கொல்லாபுரி மற்றும் அவரது மகன்களான கவாஸ்கர்,  பிரபாகர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்த அரக்கோணம் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow