மானியம் வெறும் Election Stunt..! கடைசி நேரத்தில் இது எதுக்கு - எம்பி திருநாவுக்கரசு பேச்சு

தேர்தல் நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பதால் மக்களுக்கு பயன் இல்லை - காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு

Mar 8, 2024 - 19:26
மானியம் வெறும் Election Stunt..! கடைசி நேரத்தில் இது எதுக்கு - எம்பி திருநாவுக்கரசு பேச்சு

தேர்தல் நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

நேற்று (மார்ச் 7) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் 
சிலிண்டர் மானியம் ரூ.300 திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தேர்தலுக்கு ஒன்று, ஒன்றரை மாதம் உள்ள நிலையில் பிரதமர் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார். மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பில்லை. வந்தால் மீண்டும் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார். இல்லையென்றால் அந்தச் சுமை காங்கிரஸ் தலையில் விழும். தேர்தல் நேரத்தில் கேஸ் சிலிண்டர் சலுகை அறிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இது ஒரு எலக்ஷன் ஸ்டன்ட்" என அவர் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow