'நீ இங்கே ஹீரோ கிடையாது’ - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோஹித் சர்மா

Feb 26, 2024 - 15:33
Feb 26, 2024 - 15:37
'நீ இங்கே ஹீரோ கிடையாது’ - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஹெல்மெட் அணியாமல் நின்ற சர்ஃபராஸ் கானை ரோஹித் சர்மா எச்சரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு இது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகப் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 2 ரன்களிலும், சுப்மன் கில் 38 ரன்களிலும், ராஜட் படிதர் 17 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து ஆடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்த்து வெளியேறினார். இதனால், நேற்று [24-02-24] இரண்டாவது நாள் முடிவில் 219 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. துருவ் ஜூரல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 3ஆவது நாளில் விளையாடிய இந்திய அணியின் துருவ் ஜூரல் அரைச்சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 28 ரன்களிலும், முஹமது சிராஜ் 9 ரன்களிலும் வெளியேறினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக ஆடிய துருவ் ஜூரல், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

46 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜாக் கிராவ்லி மட்டுமே 60 ரன்கள் எடுத்தார். அரைச்சதத்தை தாண்டிய ஒரே வீரரும் அவரே. பென் டக்கர் 15 ரன்களில் வெளியேற, ஓலிவ் போப் முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 4, ஜானி பேர்ஸ்டோ 30, டாம் ஹார்ட்லி 7, ஓலிவ் ராபின்சன் 0, என அடுத்து வெளியேறினர். பென் ஃபோக்ஸ் மட்டுமே டெஸ்ட் போட்டிகளுக்குரிய நிதான ஆட்டத்துடன் விளையாடினார். 67 பந்துகளை சந்தித்த அவர், 17 ரன்களில் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் டக் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்தபோது, சோயப் பஷீர் பேட் செய்வதற்காக ஸ்ட்ரைக்கில் நின்று கொண்டிருந்தார். இதனால், கேப்டன் ரோஹித் சர்மா சர்ஃபராஸை கானை ஸ்லிப்பில் நிறுத்தினார். இதனால், சர்ஃபராஸ் கான் ஹெல்மெட் அணியாமல் ஸ்லிப்பில் நிற்க சென்றார். ஆனால், ரோஹித் சர்மா ஹெல்மெட் அணியாமல் சென்ற சர்ஃபராஸ் கானை எச்சரித்தார். மேலும், இங்கே நீ ஹீரோ போல நடந்துகொள்ள கூடாது என்று காட்டமாக எச்சரித்தார்.

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow