Ashwin: ஐபிஎல் முடியும் வரை CSK குறித்து பேசமாட்டோம்... சர்ச்சைகளால் அஸ்வின் எடுத்த முடிவு
நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும், சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் தொடர்பாக எவ்வித வீடியோவும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படாது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் யாரும் எதிர்ப்பாராத வகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் போன்ற பிரிமீயம் லீக் தொடர்களில் விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இதனிடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, ஆல் ரவுண்டர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னை அணிக்காக களமிறங்கத் தொடங்கினார் அஸ்வின்.
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த போதே “அஸ்வின்” என்கிற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். 1 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களுக்கு மேல் கொண்ட இந்த சேனலில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி முதல் சர்வதேச , வெளிநாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர்பாகவும் பேசியும், விவாதம் செய்தும் வந்தார். அஸ்வினுடன், அவரது நண்பரும், RCB மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆலோசகராருமான பிரசன்னாவும் இணைந்து கிரிக்கெட் குறித்து விவாதித்து வந்தனர்.
அஸ்வினுக்கு முக்கியத்துவம் தரலயா?
இந்த நிலையில் தான், பிரசன்னா சென்னை அணி குறித்து அஸ்வினின் யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்து இருந்தார். அஸ்வின், ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் சென்னை அணியில் உள்ளபோது, ஆப்கானிஸ்தான் அணியினை சார்ந்த சுழற்பந்து வீச்சாளர் நூர் முகமதுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது என சென்னை அணியின் தேர்வுக்குழு செயல்பாடுகளை விமர்சனம் செய்திருந்தனர். இந்த வீடியோ எதிர் விமர்சனங்களை பெற்ற நிலையில், யூடியூப் வலைத்தளத்திலிருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டது.
சமீபத்தில், டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றது. இந்த போட்டி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங்கிடம், அஸ்வின் யூடியூப் சேனலில் முன்வைக்கப்பட்ட கருத்து குறித்து கேள்வி கேட்கபட்டது. அதற்கு, “ இது சம்மந்தமில்லாத கேள்வி. அஸ்வின் யூடியூப் சேனல் வைத்துள்ளாரா? என்றுக்கூட எனக்குத் தெரியாது” என பதிலளித்தார்.
சிஎஸ்கே குறித்து இனி பேசப்போவதில்லை: அஸ்வின் டீம்
அனைத்து பக்கத்திலிருந்தும் அஸ்வினுக்கு அழுத்தம் வந்த நிலையில், நேற்று திடீரென்று அறிக்கை ஒன்று அஸ்வினின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியாகியது. அதில் “ கடந்த வாரம் நடைப்பெற்ற சில சம்பவங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். அதில் ஒருமுடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இந்த ஐபிஎல் தொடர் முடியும்வரை சென்னை பங்கேற்கும் போட்டிகள் தொடர்பாக எந்த வீடியோவும் வெளியிடப்படாது என தெரிவித்துக் கொள்கிறோம்.
Visit kumudam news page: IPL 2025
மற்றொரு விஷயம், ஐபிஎல் தொடர்பாக அஸ்வின் யூடியூப் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் பங்கேற்கும் விருந்தினர்கள் தெரிவிக்கும் கருத்து அஸ்வினின் தனிப்பட்ட கருத்தல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சிஎஸ்கே பங்கேற்கும் போட்டி தவிர்த்து மற்ற அனைத்து ஐபிஎல் போட்டி குறித்தும் வழக்கம் போல் விவாதிக்கப்படும். நேயர்கள் தரும் விமர்சனங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அதனை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். உங்கள் ஆதரவை எப்போதும் போல் வழங்குங்கள் என” குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வினின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. நாளை நடைப்பெறும் போட்டியில், பஞ்சாப் அணியினை எதிர்க்கொள்ள உள்ளது சென்னை அணி.
Read more: Tilak Varma Retired out: 5 பந்தில் 8 ரன்.. நான் தான் திலக் வர்மாவே வெளியே வர சொன்னேன்!
What's Your Reaction?






