"ஆட்சி முடியறதுக்குள்ள ரூ.10 லட்சம் கோடி கடன்” மக்கள் தலை மீதுதான் விழும்.. திமுகவை விளாசிய இபிஎஸ்..!

Feb 26, 2024 - 16:51
"ஆட்சி முடியறதுக்குள்ள ரூ.10 லட்சம் கோடி கடன்” மக்கள் தலை மீதுதான் விழும்.. திமுகவை விளாசிய இபிஎஸ்..!

திமுக ஆட்சி முடிவதற்குள் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வந்துவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வானது, சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

அப்போது பேசிய அவர், நீட் தேர்வு ரத்துக்காக லட்சக்கணக்கான கையெழுத்து பெறுவதாகக் கூறிய முதலமைச்சரின் பேச்சு, திமுக இளைஞரணி மாநாட்டில் காற்றில் பறந்து காலில் மிதிபட்டு குப்பைக்குச் சென்றதாகக் கூறினார். 

நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கப்படும் அளவுக்கு தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணம் தொடர்பாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும் என்பதால், அதற்கு தடையாணை பெற உரிய தீர்வை தமிழ்நாடு அரசு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். திமுக ஆட்சி முடிவதற்குள் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வந்துவிடும் எனவும் அவர் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow