உளவு பார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி : செல்பேனில் கட்டாயம் இல்லை ஜகா வாங்கிய மத்திய அரசு

உளவு பார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி அனைவரது செல்போனிலும் பதியேற்றம் செய்ய செய்ய மத்திய அரசு வலியுறுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உளவு பார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி : செல்பேனில் கட்டாயம் இல்லை ஜகா வாங்கிய மத்திய அரசு
Sanchar Saathi app for spying

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வண்ணம், அனைத்து வகை புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. பைல்போன் பயனாளர்களை உளவு பார்க்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தன.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது:
”சஞ்சார் சாத்தி ஒரு உளவு பார்க்கும் செயலி. இது மிகவும் அபத்தமானது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. குடும்பத்துக்கோ, நண்பர்களுக்கோ அனுப்பும் செய்தியில் குடிமக்களுக்கு தனியுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த நாட்டை ஒவ்வொரு விதத்திலும் சர்வாதிகாரமாக மத்திய அரசு மாற்றி வருகிறது. அரசு எதைப் பற்றியும் பேச மறுப்பதால் நாடாளுமன்றமே சரியாக இயங்கவில்லை. எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவது மிகவும் எளிது. அவர்கள் எந்த பிரச்னையையும் விவாதிக்க அனுமதிப்பதில்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு விவாதம் அவசியம்.எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நிருபர்களிடம் கூறியதாவது; உங்களுக்கு இந்த செயலி வேண்டாம் என்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அதை செய்து கொள்ளலாம். இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை. ஆனால் இதை அவரவர் செல்போன்களில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை அதை பயன்படுத்துவர்களே முடிவு செய்து கொள்ளலாம். என கூறினார். 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow