ஜி.கே.மணி தலைமையில் குழு :பாமகவை மீட்டெடுப்பேன் ராமதாசு சபதம்
அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாசு சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.
பாமக-வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பினரும் தங்களுக்கு சாதகமானவர்களை நிர்வாகிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்தார்.
இந்த நிலையில், கட்சி அங்கீகாரம், மாம்பழ சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை ராமதாசு தரப்பு அணுகி இருந்தது. ஆனால், அன்புமணி தலைமையிலான பாமக-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதோடு 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், கடலூரில் நடைபெற்ற அம்மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாசு, நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என அன்புமணிக்கு ராமதாசு சபதம் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து பாமகவை மீட்டெடுப்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் ராமதாசு குழு அமைத்துள்ளார். பாமகவை மீட்பதற்கான சட்டபோராட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள குழு அமைப்பு. இந்த குழுவில் சையது மன்சூர், சதாசிவம், அருள், முரளி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் தொடர்பாக இந்த குழு பணிகளை மேற்கொள்ளும் என ராமதாசு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

