தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பள்ளி ஆசிரியை - நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமா?

வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளை, செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்து தொந்தரவு கொடுத்து வருகிறார்.

Jun 22, 2024 - 18:02
Jun 22, 2024 - 18:24
தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பள்ளி ஆசிரியை - நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமா?

பள்ளியில் ஆசிரியை மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில் குடும்ப பிரச்சினை காரணமா அல்லது பள்ளி நிர்வாக கொடுத்த அழுத்தமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி உமாதேவி (42). இவர் இதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உள்ள இவர் 11- வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பதினோரு ஆண்டுகளாக பாடம் எடுத்து வருகிறார். 

இவரது கணவர் ரவிக்குமார் என்பவரும் இதே பள்ளியில் ஆசிரியராக உள்ள நிலையில், இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு ஆசிரியர்களான கணவன்- மனைவி இவரும் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் ஆசிரியை உமாதேவி மட்டும் மதியம் விடுப்பு கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து இவரது கணவர் ரவிக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு சாத்திய நிலையில் கிடந்துள்ளது. இதனை அடுத்து கணவர் வீட்டிற்கு வந்த மனைவியை காணவில்லை என்று தேடிபார்த்த போது மனைவி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த புளியங்குடி காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்த வழக்குப் பதிவு செய்த புளியங்குடி காவல்துறையினர், ஆசிரியை குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா அல்லது வேலை பார்க்கும் பள்ளியில் வேறு ஏதேனும்  பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இவருடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை ஒருவர் கூறுகையில், “நான் கடந்த ஏழு வருடங்களாக இதே பள்ளியில் வேலை பார்த்து வந்தேன். ஒருவரை பிடிக்கவில்லை என்றால், காரணமே இல்லாமல் வீழ் பழி சுமத்தி அவர்களை வெளியேற்றி விடுவார்கள்.

இந்த பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினராக உள்ள மணிவண்ணன் என்பவர், பள்ளியில் உள்ள மாணவர்களிடம் மாதத் தொகையை வசூல் செய்து கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். பணிச்சுமையும் அதிகமாக வழங்கி, மன உளைச்சலையும் கொடுக்கின்றனர்.

அதே போன்று பல்வேறு விதத்தில் தொந்தரவு தருவதும், வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளை, செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்து தொந்தரவு கொடுத்து வருகிறார். இது பற்றி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டால், நீங்கள் மணிவண்ணனை அவரது கடைக்கு நேரில் சென்று பாருங்கள் எனக் கூறினார்.

இதனை தட்டிக்கேட்ட என்மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்திய நிலையில், பள்ளியில் நடக்கும் தவறுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இதனால் என் மீது வேண்டுமேன்றே குற்றச்சாட்டுகள் கூறி, பள்ளியில் இருந்து என்னை சஸ்பென்ட் செய்தனர். என்னை போன்று பல்வேறு வகையில் மன உளைச்சளுக்கு உள்ளாகிய நிலையில் அந்த ஆசிரியை தற்கொலை செய்து இறந்திருக்கலாம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow