சக ஊழியரின் 14 வயது மகள்.. நாசமாக்கிய கூலித்தொழிலாளி... அதிரடி காட்டிய நீதிமன்றம்!
ஈரோட்டில் தன்னுடன் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பெண்ணின் 14 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
                                    ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியை சேர்ந்த மைதீன்பாஷா என்பவர் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள துணிக்கடையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருடைய மகளான, எட்டாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடமன ஆசை வார்த்தை கூறி பள்ளிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மைதீன்பாஷா கட்டாய திருமணம் செய்ததை அடுத்து, அச்சிறுமியை ஒன்பது மாத கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம், பிரசவத்திற்காக அச்சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அரசு மருத்துவர்கள், ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மைதீன் பாஷாவை போக்சோ சடத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி கட்ட விசாரணையை நடத்திய நீதிபதி சொர்ணகுமார், குற்றம்சாட்டப்பட்ட மைதீன் பாஷாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            