ஈரோட்டில் கொத்து கொத்தாக நகை பறிமுதல்... அடுத்து நடந்த ட்விஸ்ட் இதுதான்

ஈரோடு அருகே தனியார் நகை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக சேலத்தில் இருந்து கோவைக்கு எடுத்து செல்லப்பபட்ட 38 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு மீண்டும் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Apr 4, 2024 - 18:19
ஈரோட்டில் கொத்து கொத்தாக நகை பறிமுதல்...  அடுத்து நடந்த ட்விஸ்ட் இதுதான்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
லட்சுமி நகர் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அந்த வாகனம், கோவையில் உள்ள தனியார் நகைக்கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யும் சிக்வெல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பது தெரியவந்தது. அதில் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 38 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொண்டு செல்லப்பட்டதும் அறியப்பட்டது.

மேலும் அதற்கான ரசீதுகள் இருந்த போதும், வாகனத்தில் வந்தவர்கள் முறையான விளக்கம் அளிக்காததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், வாகனத்தை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததோடு,  வணிகவரித்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இரண்டு துறை அதிகாரிகளும்,  வாகனத்தில் இருந்த நகைகளின் மதிப்பு மற்றும் அதற்கான ஆவணங்களை முழுமையாக சோதனை செய்தனர். இதனிடையே கோவையில் இருந்து சிக்வெல் நிறுவனத்தின் சார்பில் வந்த ஊழியர்கள், அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் மற்றும் எடுத்துச் செல்வதற்கான தகவல்கள் குறித்து உரிய விளக்கம் அளித்தை அடுத்து, நகைகளை கோவை எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow