அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் அடைக்கப்பட்டபோதும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். கடந்த 8 மாதங்களாக அமைச்சராக நீடித்துவந்த நிலையில் தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, தமிழக அமைச்சரவையில் அமைச்சராக தொடர்வது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து இருந்ததும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜாமின் பெறும் நோக்கிலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரூர் ராமேஸ்வரபட்டி பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களிடம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?