தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்: விஷம் வைத்து 15 குரங்குகள் மரணம்: 500 தெருநாய்கள் கொலை

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொடுத்த விஷத்தை குறித்து 15 குரங்குகள் உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 80 குரங்குகள் மயக்கமடைந்து கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதே போன்று கமரெட்டி மாவட்டத்தில் 500 தெருநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்: விஷம் வைத்து 15 குரங்குகள் மரணம்: 500 தெருநாய்கள் கொலை
15 monkeys die after being poisoned

குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன. மர்ம நபர்கள் குரங்குகளை இப்பகுதி இங்கு கொண்டு வந்து விஷம் வைத்து கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் சமீபத்தில் அந்த பகுதியில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.தேர்தல் பிரச்சாரத்தின் போது, போட்டியிட்ட வேட்பாளர்கள் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், தெரு நாய்களை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதே போன்று தெருநாய்களை கொன்ற சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் பெயரில், 500க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் அதிகமான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow