தேர்தல் ஆணையம் புது ட்வீஸ்ட்: அதிமுக தலைமை, இரட்டை இலை விவகாரம் பரிசீலனை: டெல்லி நீதிமன்றத்தில் தகவல்

அதிமுக தலைமை  மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் புது ட்வீஸ்ட்: அதிமுக தலைமை, இரட்டை இலை விவகாரம் பரிசீலனை: டெல்லி நீதிமன்றத்தில் தகவல்
அதிமுக தலைமை, இரட்டை இலை விவகாரம் பரிசீலனை: டெல்லி நீதிமன்றத்தில் தகவல்

டில்லி உயா்நீதிமன்றத்தில் வா.புகழேந்தி சாா்பில் வழக்குரைஞா் எஸ்.மனோஜ் செல்வராஜ், இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளாா். அதில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தோ்தல் ஆணையம் உரிய வகையில் செயல்படுத்தவில்லை. 

இது தொடா்பாக நீதிமன்றத்தை மனுதாரா் மீண்டும் நாடியபோது உயா்நீதிமன்றம் 17.12,2024-இல் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு, மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் மனுக்களை அளித்த பிறகும், அவரது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 14 மாதங்கள் ஆகிவிட்டபிறகும் இந்த நிலை உள்ளது.இதனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக எதிா்மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காததுஏன்? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதுமட்டுமின்றி, அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. இந்த விசாரணையில் அதிமுக தலைமை மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்களது பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் பதிலளித்து உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow