2ம் கட்ட மக்களவைத் தேர்தல்.. மகாராஷ்டிராவில் மந்தம்.. அதிகபட்ச வாக்குப்பதிவு எங்கே தெரியுமா?
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் கேரளாவில் 20 இடங்கள், கர்நாடகாவில் 14 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், உத்தரப்பிரதேசம் - மகாராஷ்டிராவில் தலா 8 இடங்கள், மத்தியப்பிரதேசத்தில் 7 இடங்கள், அசாம் - பீகாரில் தலா 5 இடங்கள், மேற்குவங்கம் - சத்தீஸ்கரில் தலா 3 இடங்கள், ஐம்முகாஷ்மீர் - மணிப்பூர் - திரிபுராவில் தலா 1 இடம் என 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
முன்னதாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தின் பேதுல் தொகுதியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததன் காரணமாக, அத்தொகுதியில் மே 7ம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அதிகபட்சமாக திரிபுராவில் 36.42%ம், குறைந்தபட்சமாக 18.83%ம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.
*அசாம் - 27.43%
*பீகார் - 21.68%
*சத்தீஸ்கர் - 35.47%
*ஜம்மு & காஷ்மீர் - 26.61%
*கர்நாடகா - 22.34%
*கேரளா - 25.61%
*மத்தியப் பிரதேசம் - 28.15%
*மகாராஷ்டிரா - 18.83%
*மணிப்பூர் - 33.22%
*ராஜஸ்தான் - 26.84%
*திரிபுரா - 36.42%
*உத்தரப் பிரதேசம் - 24.31%
*மேற்குவங்கம் - 31.25%
இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?