தங்கம் விலை உச்சத்தில்.. அம்மாடியோவ் ஒரு சவரன் தங்கம் ரூ.52 ஆயிரம்

தங்கத்தின் விலை உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது. ஒரு சவரன் தங்கம் இன்றைய தினம் 52ஆயிரத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apr 3, 2024 - 10:11
Apr 3, 2024 - 10:16
தங்கம் விலை உச்சத்தில்.. அம்மாடியோவ் ஒரு சவரன் தங்கம் ரூ.52 ஆயிரம்

தங்கத்தின் விலை கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து இடைவிடாமல் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கிராமுக்கு 100 ரூபாய், 50 ரூபாய் என தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கிராமிற்கு சுமார் ரூ.2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் 50,000 ரூபாயை எட்டியது. இது இந்திய வரலாற்றில் தங்கத்தின் அதிகபட்ச விலையாகும். இந்நிலையில் இன்று கிராம் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து ரூ.6,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு இன்றைய தினம் ரூ.560 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் ஒரு சவரன் நகை வாங்க மக்கள் ரூ.60,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே இந்த தொடர் விலை உயர்வுக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்து வந்தனர்.தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை குறையுமா? மேலும் மேலும் உயர்ந்து கொண்டுதான் செல்லுமா என்று நகை வாங்குபவர்கள் கேட்கத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.7,500 வரை எட்டக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow