விஜய்க்கு வில்லனாகும் சிவகார்த்திகேயன் : ஜனநாயகன் vs பராசக்தி மோதல்

நடிகர் விஜயின் கடைசிபடம் ஜனநாயகனுக்கு வில்லானாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது. 

விஜய்க்கு வில்லனாகும் சிவகார்த்திகேயன் : ஜனநாயகன் vs பராசக்தி மோதல்
Sivakarthikeyan to become Vijay's villain

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது.

பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

“பராசக்தி திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி அன்று முன்கூட்டியே ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள், படத்தை திரையிடும் திரைப்பட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளோம்” என படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் தவெக எனும் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இதனால் ஜனநாயகன் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துவிட்டார். இந்த திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவரும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர் 

இந்நிலையில் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மறுநாள் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 14-ம் தேதி வெளியிட இருந்த பராசக்தி திரைப்படம், ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது. திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow