விழா மேடையில் பத்திரிகையாளரை தாக்கிய பாபா ராம்தேவ் 

தனியார் ஊடக நிறுவனம் சார்பில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் (59), அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு மல்யுத்தப் போட்டிக்குச் சவால் விடுத்த சம்பவம் பரபரப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சவால் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழா மேடையில் பத்திரிகையாளரை தாக்கிய பாபா ராம்தேவ் 
Baba Ramdev assaults journalist on stage

சவாலை ஏற்ற பத்திரிகையாளர்

நிகழ்ச்சியின் மேடையில் இருந்த பாபா ராம்தேவ், ஜெய்தீப் கர்னிக் என்ற அந்தப் பத்திரிகையாளரைத் தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவரும், மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஜெய்தீப் கர்னிக், சவாலை ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் பத்திரிகையாளர் மல்யுத்தத்தில் அனுபவம் வாய்ந்தவர் என்பது ராம்தேவுக்குத் தெரியவந்தது.

போட்டியின் எதிர்பாராத முடிவு

போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தார். ஆனால், ஜெய்தீப் கர்னிக் சாமர்த்தியமாகத் தவிர்த்ததோடு, திடீரென அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில், ராம்தேவ் கர்னிக்கைத் தரையில் தள்ளியபோதும், பத்திரிகையாளர் அதிலிருந்து மீண்டார். இறுதியில், ஜெய்தீப் கர்னிக், பாபா ராம்தேவைத் தரையில் தள்ளிப் போட்டியில் வென்றார். இருப்பினும், இருவரும் புன்னகையுடன் எழுந்து, நட்புணர்வோடு கைகுலுக்கிக் கொண்டனர்.

மல்யுத்தம் குறித்து ராம்தேவின் கருத்து

போட்டிக்குப் பிறகு பேசிய பாபா ராம்தேவ், மக்கள் வலிமை மற்றும் உடற்தகுதிக்காக மல்யுத்தத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும், இந்த விளையாட்டு உலக அளவில் பிரபலமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் அவர் பாராட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow