Samantha: நயன்தாரா இடத்தில் சமந்தா... மம்முட்டி, கெளதம் மேனன் கூட்டணியில் திடீர் மாற்றம்!
நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்கும் சமந்தா மீண்டும் களமிறங்க முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பின்னர் பாலிவுட்டிலும் தடம் பதித்தார். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கலங்கடித்தார். முக்கியமாக நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் சமந்தாவின் கேரக்டர் செலக்ஷன் வேற லெவலில் இருந்தது. இதனிடையே திடீரென மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக ரொம்பவே கஷ்டப்பட்டார் சமந்தா. நடக்கக் கூட முடியாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருவதாகவும், இதனால் சில நாட்களுக்கு நடிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமந்தா மீண்டும் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில், சமந்தாவும் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. வருடத்திற்கு 4 முதல் 5 படங்கள் நடித்து வருகிறார் மல்லுவுட் மெகா ஸ்டார் மம்முட்டி. சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் ரிலீஸான டர்போ சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளாராம். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 20ம் தேதி முதல் சென்னையில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இப்படத்தில் மம்முட்டியுடன் சமந்தாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் மூலம் மலையாளத்தில் முதன்முறையாக அறிமுகமாகும் சமந்தா, மம்முட்டியுடனும் இணைகிறார் சமந்தா. முன்னதாக இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தனர். அதேபோல் மம்முட்டி – கெளதம் மேனன் கூட்டணியும் இப்படத்தில் தான் முதன்முறையாக இணைகிறது. இதனிடையே இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்ததாகவும், ஆனால் தற்போது சமந்தாவுக்கு இந்த சான்ஸ் கிடைத்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் படங்கள் சமந்தாவின் கேரியரில் மிகப் பெரிய சக்சஸ்ஸாக அமைந்தன. தற்போது ஃபீல்ட் அவுட் ஆகியுள்ள சமந்தா திரும்பவும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்தப் படமும் சமந்தாவிற்கு சூப்பரான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மம்முட்டிக்கும் இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும் என மலையாள திரையுலகினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?