ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறது காங். - ஸ்மிருதி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர்களால் மட்டும்தான் ராணுவ வீரர்களின் பெரும் தியாகத்தை கொச்சைப்படுத்திப் பேச முடியும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியுள்ளார்.

May 12, 2024 - 07:47
ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறது காங். - ஸ்மிருதி குற்றச்சாட்டு..

தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கடந்த 10-ம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதல் குறித்து ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார். அதில் ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தாக கூறிய அவர், அவர்களது தியாகத்தை வைத்து அனுதாபம் பெறும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார் என குற்றம்சாட்டினார். மேலும், இதைவைத்து பிரதமர் அரசியல் செய்து வருகிறார் எனவும் ரேவந்த் ரெட்டி கடுமையாக சாடினார். 

இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு மத்திய அமைச்சரும், அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளார்களிடம் அவர் பேசியபோது, காங்கிரஸ் தலைவர்களால் மட்டும்தான் ராணுவ வீரர்களின் தியாகத்தை இப்படி கேள்வி கேட்டுக் கொச்சைப்படுத்த முடியும் எனப் பேசினார். இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதை தவிர காங்கிரசுக்கு வேறு என்ன தெரியும் என்றும் கேள்வி கேட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ரேவந்த் ரெட்டி தெலங்கானா மாநிலத்தைக் கொள்ளையடித்து, காந்தி குடும்பத்திற்கு ஏடிஎம் போல செயல்பட்டு வருகிறார் எனவும் வரும் தேர்தலில் அவர் தனது முதலமைச்சர் பதவியைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும் என்றும் விமர்சித்தார். மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்திருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இனி சிறைக்குள் தன் வாழ்க்கை எப்படி கழியப்போகிறது என்று கவலைப்பட்டால் போதும் என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow