இது பட ரிலீசா இல்ல ஃபோன் ரிலீசா...விற்பனைக்கு வந்தது ஆப்பிள் 16.. கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்..

இந்தியாவில் ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள் இன்று (செப்டம்பர் 20ம் தேதி) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் மையங்களில் நேற்று நள்ளிரவு முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Sep 20, 2024 - 09:03
Sep 20, 2024 - 09:03
இது பட ரிலீசா இல்ல ஃபோன் ரிலீசா...விற்பனைக்கு வந்தது ஆப்பிள் 16.. கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்..

இந்தியாவில் ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள் இன்று (செப்டம்பர் 20ம் தேதி) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் மையங்களில் நேற்று நள்ளிரவு முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்: உலகளவில் செல்போன்கள் விற்பனையில் ஐபோன்கள் முன்னணியில் உள்ளன. ஆப்பிள் ஐபோன்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்த நாளில் இருந்தே இதன் எதிர்ப்பார்ப்புகள் தொடங்கி விட்டன.

இதனையடுத்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் உள்ளிட்ட சாதனங்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணத்தில் செப்டம்பர் 8ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு நடந்த இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வவில் ஆப்பிள் ஐபோன்கள் வெளியிடப்பட்டன.

அதாவது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வரிசையில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் 16 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.1 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 பிளஸில் 6.7 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 18 இயங்குதளம் கொண்ட இந்த போன்கள் ஏ18 ப்ராசஸர் கொண்டுள்ளது. 

கேமராவை பொறுத்தவரை 48 MP மெயின் கேமராவுடன் 12 MP அல்ட்ரா வொய்ட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் 12 MP செல்பி கேமரா உள்ளது. கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, அல்ட்ராமரைன் உள்பட 5 வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன. 128GB, 256GB மற்றும்  512GB என 3 வேரியன்ட்களில் இந்த போன்கள் அறிமுகமாகியுள்ளன. ஐபோன் 16 போனின் 128ஜிபி மாடல் விலை ரூ.79,900ல் இருந்தும், ஐபோன் 16 பிளஸ் 128ஜிபி மாடல் ரூ.89,900ல் இருந்தும் தொடங்குகின்றன.

அடுத்ததாக ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அம்சங்களை பார்த்தால் ஐபோன் 16 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன்களில் 48 MP  அல்ட்ரா வொய்ட் கேமரா,  12 MP செல்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் Face ID, Type to Siri, Eye Tracking, Live Speech, ACTION BUTTION, AI Technology உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. iOS 18 இயங்குதளத்தை இந்த போன்கள் கொண்டுள்ளன. Black Titanium, White Titanium, Natural Titanium, Desert Titanium ஆகிய வண்ணங்களை இந்த போன்கள் கொண்டுள்ளன. ஐபோன் 16 ப்ரோ 128GB, 256GB, 512GB மற்றும் 
1TB என 4 வேரியன்ட்களிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256GB, 512GB மற்றும் 1TB என 3  வேரியன்ட்களிலும் கிடைக்கின்றன. ஐபோன் 16 ப்ரோவின் விலை ரூ.1,19,900ல் இருந்தும், 16 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,44,900ல் இருந்தும் தொடங்குகின்றன. 

இதேபோல் ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட 'எர்பட்ஸ் 4' விலை ரூ.12,900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களை பொறுத்தவரை, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் ரூ. 89,900க்கும், ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் ரூ. 24,900க்கும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல் ரூ. 46,900க்கும் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள் இன்று (செப்டம்பர் 20ம் தேதி) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் மையங்களில் நேற்று நள்ளிரவு முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow