நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல்: தங்கம் சவரனுக்கு ரூ 1320 குறைவு
நேற்றைய தினம் சவரன் 1 லட்சம் ரூபாயை தாண்டிய நிலையில், இன்று சவரன் ரூ 1320 குறைந்து 98,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வாரத்தின் முதல் நாளான நேற்று இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாக விலை விற்பனை ஆனது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.99,680 என்ற உச்சத்தை எட்டியது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனையானது. மதியம் மேலும் அபரிமிதமாக விலை உயர்ந்தது.
சவரனுக்கு மேலும் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.12,515-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ 1320 குறைந்து, 98,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 12,350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிலோ ரூ 4 ஆயிரம் குறைந்து 2,11,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ 4 விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.
What's Your Reaction?

