உயரும் தங்கம்.. நகை வாங்க யோசிக்கும் இல்லத்தரசிகள்.. அட்சய திருதியைக்கு நகைக்கடைக்காரர்கள் புது ஐடியா
சென்னை: தங்கத்தின் விலை ஊசலாட்ட நிலையில் உள்ளது. ஆபரணத்தங்கம் நேற்று சவரனுக்கு 920 ரூபாய் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாகவே ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. ஒருநாள் இறங்குவதும் இரண்டு நாட்களுக்கு விலை ஏறுவதுமாக உள்ளது.
தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர்.
கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. 22ஆம் தேதியன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 6,845 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் தடாலடியாக குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று அதிகபட்சமாக கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1,160 குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதியன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6710 ஆக விற்பனையானது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ. 53,680 ஆக விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை நேற்றைய தினம் ஒரேடியாக சரிவை சந்தித்துள்ளது. இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635 விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை குறைந்த செய்தி இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.6715க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ640 உயர்ந்து ரூ.53,720ஆக விற்பனையாகிறது. மே 10ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 87 ரூபாய்க்கும் கிலோ 87000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அரை லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க கடைக்கு மக்கள் வரமாட்டார்கள் என்று நினைத்த நகைக்கடைக்காரர்கள் வீடு வீடாக சென்று தாம்பூல பை கொடுத்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க ஆன்லைனிலும் கடைகளுக்கும் நேரில் வந்தும் பணம் செலுத்தி நிறைய பேர் முன்பதிவு செய்கின்றனர். வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என நகை விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
What's Your Reaction?