சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டது எப்படி?

5 முறை மக்களவை எம்.பியாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படவேண்டும். இதற்கான தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்படி பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிச்சயம் என்பதால் அந்தப் பதவிக்கு, சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார்.
What's Your Reaction?






