Kunal Kamra: முதலில் சிவசேனா.. இப்போ T Series.. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கு தொடரும் சிக்கல்கள்

T-Series நிறுவனம் ஒரு கைக்கூலி போல் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா.

Mar 27, 2025 - 14:33
Kunal Kamra: முதலில் சிவசேனா.. இப்போ T Series.. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கு தொடரும் சிக்கல்கள்
kunal kamra

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஹாட் டாபிக், நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா சுற்றி நடக்கும் விஷயங்கள் தான். அவர் சமீபத்தில் பதிவிட்ட யூடியூப் வீடியோவினை டி-சீரிஸ் நிறுவனம் பதிப்புரிமை புகார் (copyright strike) அடிப்படையில் பணம் ஈட்டும் வாய்ப்பினை (monetization) முடக்கியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஸ்டாண்ட் அப் காமெடியன் (standup comedian) குணால் கம்ரா, சமீபத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் ஏக்நாத் ஷிண்டேவே துரோகி என்று குறிப்பிட்டு பாடியது மஹாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  “தில் தோ பகல் ஹை” படத்தின் ஒரு பாடலை குணால் கம்ரா நகைச்சுவையாக மாற்றி ஏக்நாத் ஷிண்டேவே கேலி செய்ததாக கூறப்படுகிறது. குணால் கம்ராவின் செயலால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி தொண்டர்கள் மும்பையில் நிகழ்ச்சி நடந்த இடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் ஸ்டுடியோவை சேதப்படுத்தினர்.

மேலும், குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவசேனா ஆதரவாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், குணால் கம்ராவின் சமீபத்திய ஸ்டாண்ட் அப் காமெடி வீடியோவான "நயா பாரத்" யூ-டியூப் வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6.8 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், திடீரென்று யூ-டியூப் வலைத்தளத்தில் அந்த வீடியோவின் பணம் ஈட்டும் வாய்ப்பு (monetization) முடக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் கட்டும் வரியினை அரசாங்கம் எவ்வாறு வீணடிக்கிறது என்பதை நகைச்சுவையாக மிஸ்டர் இந்தியா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஹவா ஹவாய்” பாடலினை மாற்று வரிகளில் பாடி விமர்சித்திருப்பார் அந்த வீடியோவில். இந்த திரைப்படத்தின் பாடலுக்கான காப்புரிமை டி-சீரிஸ் நிறுவனத்திடம் உள்ளது. குணால் கம்ரா இந்த பாடலை பயன்படுத்த தங்களிடம் முறையான உரிமம் பெறவில்லை என டி-சிரீஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பகடி செய்வது குற்றமா?

இதுக்குறித்து தனது X பக்கத்தில் குணால் கம்ரா பதிவிட்டுள்ளார். அதில், “T-Series , ஒரு கைக்கூலி போல் செயல்படுவதை நிறுத்துங்கள். ஒரு விஷயத்தை பகடி, நையாண்டி செய்வது என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நான் பாடலின் வரிகளையோ, அசல் இசையினையோ பயன்படுத்தவில்லை. இந்த வீடியோவினை நீங்கள் முழுமையாக நீக்கினால்,  பல்வேறுத் தளங்களில் பதிவிடப்படும் பாடல்/நடன வீடியோவினையும் நீக்க வேண்டும். படைப்பாளர்களே இதே நோட் செய்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவினை அடுத்து, பணம் ஈட்டும் வாய்ப்பு முடக்கப்பட்ட யூ-டியூப் வீடியோவில் “thanks" ஆப்ஷனை பயன்படுத்தி பல்வேறு ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான தொகையினை வழங்கி வருகிறார்கள். ”நீங்கள் செய்யும் பணிகளை தொடருங்கள்..நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்” எனவும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow