ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை 

ரயில்களில் படிக்கட்டில் பயணம் அல்லது சாகசங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் தண்டனை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. 

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை 
Southern Railway warns

சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேலை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த ரயில்கள் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் ரயில்களில் தொங்கியபடி சாகங்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதுபோன்ற செயல்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மற்ற பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சில உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த விவகாரத்தில் ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பயணிகளின் கோரிக்கை ஏற்று ஒரு அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் படிக்கட்டில் பயணம் அல்லது சாகசங்களில் ஈடுபட்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறித்த உதவிகளுக்கு ரயில்வே உதவி எண் 139 ஐ தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow