AI ஹாலோகிராமை மணக்கும் முதல் பெண் கலைஞர்
தனது ஹாலோகிராம் இணையருடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்
உலகில் முதல்முறையாக AI-யால் உருவாக்கப்பட்ட ஹாலோகிராமை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கலைஞர் திருமணம் செய்ய இருக்கிறார்.
ஸ்பெயினைச் சேர்ந்தவர் அலிசியா ஃப்ரேமிஸ். இவர் வீதி நாடக கலைஞராக உள்ளார். இந்த நிலையில் ஹாலோகிராபிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றால் AI-யால் உருவாக்கப்பட்ட ஹாலோகிராமை, அலிசியா ஃப்ரேமிஸ் திருமணம் செய்ய உள்ளார். திருமணத்திற்கான இடத்தையும் இவர் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டு ரோட்டர்டாமில் உள்ள அருங்காட்சியகத்தில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக தங்களின் திருமண ஆடையையும் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அலிசியா ஃப்ரேமிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது கணவர் பெயர் அலெக்ஸ். என்னுடைய உணர்வுகளை அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அவரின் வயது மற்றும் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணமானது காதல் திருமணம் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், காதல், குடும்பச்சூழல், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவை குறித்து ஆவணப்படத்தை உருவாக்க விரும்புகிறேன்.
மேலும், தனது ஹாலோகிராம் இணையருடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.இதனிடையே தொலைப்பேசிகள் நம்மைத் தனிமையில் இருந்து காப்பாற்றியது போல் நம் வாழ்வில் வெற்றிடத்தை நிரப்பியது.அதேபோல் ஹாலோகிராம்கள் நமது குடும்பங்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும்.இவை உறவுகளை மேம்படுத்தும்”என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?