ஓ.பி.எஸ்-க்கு 2-வது வரிசையில் இருக்கை... ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு...

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்டப்பேரவையில் 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

Feb 14, 2024 - 10:41
ஓ.பி.எஸ்-க்கு 2-வது வரிசையில் இருக்கை... ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு...

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவித்த அதிமுக, பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை அவருக்கு ஒதுக்கிட வேண்டுமென சபாநாயகர் அப்பாவு-விடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக 5 முறை நினைவூட்டல் கடிதம் அதிமுக சார்பில் அனுப்பப்பட்டது.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வில், இதே கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு-விடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தினார். இதனை சபாநாயகர் பரிசீலிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவையில் குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு அருகே அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow