தமிழக அரசின் குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்

Dec 13, 2023 - 14:55
Dec 13, 2023 - 19:51
தமிழக அரசின் குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வருகிற 30ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. இந்த சிறப்பு முகாமினை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற மையங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை நடைபெறும். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 160 வாகனங்கள் இயங்கி வருகின்றன.இதுவரை 7 வாரம் நடத்தப்பட்ட முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னும் 3  வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow