மகாநதியில் திடீர் கொந்தளிப்பு..படகு கவிழ்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு !
ஒடிசாவில் படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பெண்கள் - குழந்தைகள் என 7 பேர் மாயமாகியுள்ளனர்.
பர்கார் மாவட்டம் பந்துபாலி பகுதியில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நதியில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் எதிர்பாராத நேரத்தில் படகு கவிழ்ந்தது. தொடர்ந்து தகவலறிந்து சென்ற மீட்புப் படையினர் பயணிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண் உட்பட இருவரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து 4 பெண்கள், 3 குழந்தைகள் என 7 பேர் மாயமான நிலையில், அனைவரையும் தீவிரமாகத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
இந்நிலையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
What's Your Reaction?