போட்டியிட வேட்பாளர்கள் இல்லையே.. திண்டாடும் நிலையில் காங்கிரஸ்.. பிரதமர் மோடி கிண்டல்
காங்கிரஸ் கட்சி தங்களது கோட்டையாக கருதும் இடங்களில் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் அல்லல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். பாஜக அரசியலை பின்பற்றவில்லை, தேசிய கொள்கையை பின்பற்றுகிறது. பாஜகவை பொறுத்தவரை தேசமே முதன்மையானது. இதுவே தங்களது முழக்கம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நமது தேசம் விரக்தியிலும், நெருக்கடியிலும் சிக்கி பின்னோக்கி சென்றது.
காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கமிஷனுக்காக பணியாற்றுகிறது. ஆனால் பாஜக தலைமையிலான N.D.A கூட்டணியும், மோடி அரசும் இயக்கமாக செயல்படுகிறது. I.N.D.I.A கூட்டணி தங்களது வெற்றிக்கு உழைக்காமல் பாஜகவை 370 தொகுதிக்கு கீழும், N.D.A கூட்டணியை 400 தொகுதிக்கு கீழும் வெற்றி பெற செய்யவே எதிர்க்கட்சிகள் வேலை செய்து வருகின்றன.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் அந்த நிலையில் தான் உள்ளது. இதன் காரணமாகவே தங்களது வேட்பாளர்களை அடிக்கடி சமாஜ்வாதி கட்சி மாற்றி வருகிறது. ஆனால் காங்கிரஸ் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. தங்களது கோட்டையாக கருதும் இடங்களில் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் தேடும் நிலையில் காங்கிரஸ் உள்ளது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக கிண்டலடித்துள்ளார் பிரதமர் மோடி.
What's Your Reaction?